சோறு தர மறுத்த மனைவி ! ஆத்திரத்தில் முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவர் கைது..!
முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.
சேலையூரை சேர்ந்தவர் வினோத் குமார் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார் , போன் செய்து சற்று நேரத்தில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் உடனே உஷாரான போலீசார் முதல்வர்கள் வீட்டிற்கு நிபுணர்களும் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரிய வந்தது ,இந்த நிலையில் போலீசார் நம்பரை ஆய்வு செய்தபோது வினோத்குமார் இருந்த இடம் தெரிய வந்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரை பிடித்து நீதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் என்று போலீசார் கேட்டதற்கு வினோத்குமார் நான் இல்லை இல்லை என்று கூறியுள்ளார் , பிறகு அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தார் என்பதை ஒப்புக் கொண்டார் .
இந்நிலையில் இதன் காரணமாகவே விசாரணையின் போது வினோத் கூறியது இந்த ஊரடங்கு காரணமாக எனக்கு வேலை இல்லை வருமானம் இல்லை இதனால் என் மனைவியை எனக்கு சரியாக சாப்பாடு கூட கொடுக்கவில்லை , இதனால்தான் நான் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தேன், என்றும் கூறியுள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர் இது குறித்து சேலையூர் போலீசார் கூறுகையில் மனைவியை பழிவாங்க வேண்டுமென்று கருதிய வினோத்குமார் மனைவிக்கு தெரியாமல் அவரின் செல்போனில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார் பின்னர் எதுவும் நடக்காதது போல் வீட்டிலேயே இருந்துள்ளார். வினோத்குமாரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.