மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான் – கமல்ஹாசன்

Default Image

மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

தமிழகத்தில்  ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் 3-ஆம்  ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பல கேள்விகள்,சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்த பயணத்தில் என் ஒற்றை நம்பிக்கை,முழு பலம்,என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். வாக்களித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியை சொல்லிலின்றி,தமிழகத்தை புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy
Prime Minister's house bombed