முழுமையாக கரையை கடந்த கஜா புயலின் கண் பகுதி…!
கஜா புயலின் கண்பகுதி சரியாக 2.28 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.நிலப்பகுதியில் கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்த்திசையில் பலத்தகாற்று வீசக்கூடும்.அதேபோல் புயல் கரையை கடக்க மேலும் 2 மணி நேரம் ஆகும். அதேபோல் கஜா பகுதியின் கண் பகுதி முழுமையாக கரையை கடக்க 2 மணி நேரங்கள் ஆகியுள்ளது.
புயலின் கன்பகுதி கரையை கடந்தாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது.காரைக்காலில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.அதிராம்பட்டினத்திலும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.இனி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.