விமானத்தில் நடந்த திருமணத்தில், தனி நபர் இடைவெளியை பின்பற்றத்தது பற்றி புகரளிக்க விமான நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ் மற்றும் மதுரையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் தீச்சனா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருக்கும் வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் திட்டமிட்ட நிலையில், மதுரையிலிருந்து – தூத்துக்குடி செல்ல தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி அளவில் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மணமகன் மணமகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் 161 பேர் பயணித்தனர். மேலும், விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 7:30 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. காலை ஏழு 7:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இந்நிலையில், விமானத்தில் நடைபெற்ற இத்திருமணம் சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், தனி நபர் இடைவெளியை பின்பற்றத்தது பற்றி புகரளிக்க விமான நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…