எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் பேசிய அவர், எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம்.
அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவப்புரம் திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது. இன்னும் நான்கு மாதத்தில் நமக்கு வழி பிறக்கப்போகிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டு காலம் நாம் ஆட்சியில் இல்லை என்றாலும், கொரானா காலத்தில் உலகத்தில் யாரும் செய்யாத அளவிற்கு நாம் ஒன்றினைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…