விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : தொடர்ந்து முன்னிலை பெறும் திமுக.! பின்தங்கிய பிற கட்சிகள்…
இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகிறார்கள்.
இதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தான் முன்னிலை பெற்று வருகிறது. அடுத்ததாக வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படுகையிலும் முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார் .
2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 18,0578 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 7,323 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1,120 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 20 சுற்று வாக்கு எண்ணிக்கையில் இன்னும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.