உயிரை பறித்த கொடிக்கம்பம்.. விஜயகாந்த் பிறந்த நாளில் சோகம்.!

கடலூர் : தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலியானார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு சிலையை திறந்து வைத்தார்.
இதனிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது, கொடிக்கம்பம் நட முயன்ற தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் (40) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடுக்குப்பம் கிராமத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் கொடிக்கம்பம் உரசி மின்சாரம் தாக்கியபோது, அவரை காப்பாற்ற முயன்ற மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இந்த சம்பவம் தொடர்பாக, முத்தாண்டிகுப்பம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.