புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால்,அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில்,தொடர் மழையால் புழல் ஏரி நிரம்பி
வருகிறது.இதனால்,21.20 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 19.40 அடியாக உயர்ந்துள்ளதால்,இன்று 11 மணியளவில் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
மேலும்,புழல் ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், உபரிநீர் திறப்பும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.ஏரிக்கு நீர் வரத்து 3000 கன அடியாக உயர்ந்ததையடுத்து,உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால்,கரையின் இருபுறமும் இருக்கக்கூடிய நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி,வடகரை,கிராண்ட்லைன் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,புழல்,வட பெரும்பாக்கம்,மஞ்சம்பாக்கம்,மாத்தூர்,கொசப்பூர்,மணலி,சடையான்குளம் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…