Breaking: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளது – சட்டப்பேரவை செயலர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை செயலர் விக்கிரவாண்டி தொகுதிகாலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த ராதாமணி ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இதனால் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.
எனவே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தது.தற்போது தமிழக சட்டப்பேரவை செயலர் விக்கிரவாண்டி தொகுதிகாலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025