கோகுல் ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு.! சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.!
கோகுல் ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்படும். – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். ஆயுள் தண்டனை தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேளையில் இன்று இந்த வழக்கு விசாரணையில் வழக்கு குறித்து நீதிபதிகள் கருத்து கூறினர்.
அதில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்படும். உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படமாட்டாது. என கோவூரி வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.