உச்சநீதிமன்றத்தில் வெல்லப்போவது யார்.? இபிஎஸ் vs ஓபிஎஸ்.! இன்று தீர்ப்பு நாள்…

Published by
மணிகண்டன்

இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

அதிமுக கட்சியானது தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என பிரிந்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தான் அதிக முக்கியத்துவமும், ஆதரவாளர்களும் இருக்கின்றனர் என்பது நிதர்சனமாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர் இபிஎஸ் : இந்த விவகாரமானது கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பூதகரமாக வெடித்தது. அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தனர்.

பொதுக்குழு செல்லும் : இந்த பொதுகுழுவை எதிர்த்தும் , அங்கு அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், அதிமுக பொதுகுழுக்கூட்டம் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்ட்டது.

மேல்முறையீடு : சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குக்கான இறுதி கட்ட வாதங்கள் அனைத்தும் கேட்கப்பட்டது.  தீர்ப்பு அளிக்கும் தேதியை மட்டும் குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தீர்ப்பு : இன்று வெளியாகும் தீர்ப்பில் அதிமுக கட்சியும், இரட்டை இலையும் யாருக்கு என்பது தெளிவாகிவிடும். அதனை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, இந்திய அரசியல் வட்டாரத்திலும் பலர் காத்திருக்கும் வண்ணம் இந்த வழக்கு கவனத்தை பெறுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

16 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

51 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

2 hours ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago