இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – வைகைச்செல்வன்
- இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
- இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது.
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.அதாவது இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.அதேபோல் தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்துள்ளது.இந்த தீர்ப்பு தினகரன் – சசிகலா தரப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இரட்டை இலை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.