முதல்வர் வாகனத்திற்கு பின்னால் சென்ற வாகனம் விபத்து..!

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நெல்லைக்கு முதல்வர் சென்ற போது, முதலமைச்சர் வாகனத்திற்கு பின்னால் சென்ற வாகனம் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மற்றோரு வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தொடங்கி நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் இன்று நெல்லைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.