அரசு வேலைக்கு மதிப்பு குறையாது! அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் – முதல்வர் உரை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.  2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின் அவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு வேலைக்கு உள்ள மதிப்பு எப்போதும் குறையாது என தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையில், தன்னலம் கருதாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஏரளாமானோர் உள்ளனர். மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு ஊழியர்கள் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும்.

எனவே, முழு ஈடுபாட்டுடன் அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டும். அரசு பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும். எப்படியாவது அரசு பனி வாங்கிவிட வேண்டும் என்று இளைஞர்களின் கனவாக இருக்கிறது. அரசு எந்திரம் நந்தடராக செயல்பட வேண்டுமெனில் அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் செய்து, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர் அரசு ஊழியர். உடல் உறுப்பு தானம் செய்த தேனியை சேர்ந்த அரசு ஊழியருக்கு பாராட்டு தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய முதல்வர், ஆசிரியர் தேர்வை வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை விரைவாக திருத்த உயர் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம். தமிழக இளைஞர்களுக்கு அரசு பணி தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குடிமைப்பணி தேர்வுகளில் அதிகளவில் தமிழக மாணவர்கள் தேர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கடந்தாண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, என்னுடைய பிரதிநிதியாக இருந்து மக்கள் சேவைகளை நிறைவேற்றுங்கள் என பணிநியமன ஆணைகள் பெற்றவர்களுக்கு அறிவுறுத்தினார். முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, தந்தை நிலையில் இருந்தும் வாழ்த்துகிறேன்.  எனக்கு கிடைக்கும் நல்ல பெயரும், கெட்ட பெயரும் அரசு அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகத்தான் வரும். அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களை சந்திக்க வருபவர்களை உட்கார வைத்து குறைகளை கேளுங்க, அப்படி செய்தாலே பாதி குறை தீர்ந்துவிடும் என்றார்.  நடப்பாண்டில் மேலும் 17,000 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் புதிதாக 50,000 பேர் அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மழையோ மழை: 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.., 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது.   இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…

3 minutes ago

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.., திமுகவினர் உற்சாக வரவேற்பு!

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…

5 minutes ago

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

3 hours ago

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

7 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

8 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

9 hours ago