வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் – எல்.முருகன்
வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று முருகன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே திருத்தணி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டது.
இந்நிலையில் சென்னையில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.சென்னையில் உள்ள நசரேத் பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன் ,கடவுள் முருகனின் துணை கொண்டு திருத்தணியில் யாத்திரையை தொடங்க உள்ளோம்.வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தார்.பின்னர் வேல் யாத்திரைக்கு தடை என நேற்று தெரிவித்த நிலையில், இன்று குறைந்த அளவு வாகனங்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.