நெருங்கும் தேர்தல்….! தஞ்சாவூர் சென்ற சசிகலா…! என்ன காரணம்…?
சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, பெங்களூர் சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். அதனைத் தொடர்ந்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், யாருடைய சொல்லுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்திருந்தார்.
பின் சென்னை வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று இரவு கார் மூலம் கணவர் நடராஜன் இல்லத்திற்கு சென்றுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இவரது தாஞ்சாவூர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அங்கு தஞ்சாவூர் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வமான வீரனார் கோவில் வியாழக்கிழமை நடைபெறும் அவரது கணவர் நடராஜன் சகோதரியின் பேர குழந்தைகளுக்கான காதணி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி நடராஜனின் நினைவு நாளையொட்டி விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.