நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…! சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்…! – தேர்தல் ஆணையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமானம் செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தர்மேந்திரா குமார், மது மகாஜன், பி.ஆர்.பாலக்ரிஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில், மஜ்ஜித் சிங் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.