தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சாலை மறியலில்..,
மதுரை:தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக உச்சநீதி மன்றத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இதை கண்டித்தும், இந்த சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரையில் ஏப்.11ம் தேதி ரயில்மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.அவர்கள் அறிவித்தபடி நேற்று பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு வந்தனர்.ஆனால் முன்னதாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சட்டதிருத்தம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் நோக்கி நடந்தனர் சென்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் செல்லக்கண்ணு தலைமையிலான 12 பெண்கள் உள்பட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.