பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை!
பிரதமர் மோடியால் பாராட்டப்பட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்தது ஐ.நா சபை.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார்.
பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய நிலையில், இவருக்கு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில், தற்போது, மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்ததுள்ளது. மேலும் இவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.