மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.மேலும் சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளது.நாடுமுழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை , டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…