ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு – கே.பாலகிருஷ்ணன்
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் இந்தி மட்டுமே பயிற்று மொழி.ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் சிபாரிசு அமைந்துள்ளது. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என தெரிவித்துள்ளார்.