மத்திய பட்ஜெட் அல்வா தான்., பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் இருக்கும் – சீமான் விமர்சனம்

Default Image

தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழே தான் பாஜக என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை, மேலூர் அருகே ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், வலிமை மிக்க இந்திய அரசு ஏன் மீனவர்களை பாதுகாக்கவில்லை? நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளது.

நட்பு நாடு என சொல்லிக்கொண்டு நமது மீனவர்களை கொன்றுகுவிக்கும் இலங்கைக்கே ஆயுதம் மற்றும் பயிற்சிகளை வழங்கிவருகிறது மத்திய அரசு. மீனவர் படுகொலையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரவில்லை. தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் தமிழகம்தான் இருக்கவேண்டுமே தவிர இந்தியாவாக இருக்கக்கூடாது.

பிப்.1ல் பட்ஜெட் தாக்கல் – இன்று அல்வா வழங்கும் நிகழ்ச்சி.!

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க வேண்டுமென நினைக்கிறது. நாம் தமிழர் கட்சி முன்னேற்ற பாதையில் செல்கிறது. பிப்.1ல் நடைபெற இருக்கும் மத்திய பட்ஜெட் அல்வா தான். வேல்யாத்திரை தொடங்கியது நாங்கள் தான். தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழே தான் பாஜக என்றும் சசிகலா நல்ல உடல் நலத்துடன் மீண்டுவர வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்