கீழடியில் உள்ள பொருட்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்படும்- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கீழடியில் உள்ள பொருட்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி குறித்து கூறுகையில்,கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள், மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும்.
கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டதும், தொல் பொருட்கள் அனைத்தும் மீண்டும் கீழடிக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.