விரைவில் எடப்பாடி பழனிசாமி குறித்த உண்மைகள் வெளிவரும் – ஆர்.எஸ்.பாரதி
விரைவில் எடப்பாடி பழனிசாமி குறித்த உண்மைகள் வெளிவரும் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றியுள்ளார்.
நான்காண்டுகள் பொறுப்பில் இருந்தவர் பொறுப்புடன் பேச வேண்டும். சொத்துவரி உயர்வுக்கு யார் காரணம் என்பதை மு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் எப்படி எல்லாம் உயர்த்தப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கோடநாடு கொள்ளை கொலை விவகாரத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது அவை ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
விரைவில் எடப்பாடி பழனிசாமி குறித்த உண்மைகள் வெளிவரும். நிச்சயம் தவறு செய்தவர்கள் சிறை செல்வார்கள் பல்வேறு கோணங்களில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.