ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த த.வெ.க கொடி! மீண்டும் புதியதாக மாற்றி அமைக்கப்பட்டது!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடந்த இடத்தில் புதியதாக கொடி மாற்றி அமைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைத்திருந்தார்.
இந்த கொடிக் கம்பத்தை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தப்படாது. இதற்காக தவெக கட்சி சார்பில், மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்ற என்பவரிடம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மாநாடு நடந்து முடிந்து கொடி கம்பத்தில் கொடி பறந்துகொண்டிருந்த சூழலில், சமீபத்தில் தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்திலும் சேதம் ஏற்பட்டது. புயலின் போது காற்று அதிகமாக வீசிய காரணத்தால் கோடி கிழுந்தது. அதைப்போல கனமழை பெய்த காரணமாக கொடியின் அடித்தளத்தில் சேதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, த.வெ.க கழக கொடி புயலின் காரணமாக சேதமடைந்தது இருக்கிறது ஆகையால் முடிந்தவரை விரைவில் கொடியை மாற்றினால் நன்றாக இருக்கும் என பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமாக அதற்கான வீடியோக்களை வேண்டுகோளை விடுத்திருந்தார்கள். இந்த நிலையில், சேதம் அடைந்த அந்த கொடியை மாற்றிவிட்டு இன்று புதியதாக கொடி மாற்றி அமைக்கப்பட்டது.