செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.! இன்று 3வது நீதிபதி முன் விசாரணை.!
செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று 3வது நீதிபதி முன் விசாரணை நடைபெற உள்ளது.
அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யபட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான வாதங்கள் முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு கூறுகையில், செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பளித்தார். எனவே நீதிமன்ற காவலில் அவரை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால் அவரை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பில், ஏற்கனவே நிஷா பானு கூறிய தீர்ப்பிலிருந்து மாறுபட்டார். அவர் கூறுகையில், மனுதாரர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் ஆகாது. கைது நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிதிகளை பின்பற்று நடைபெற்று உள்ளது என மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதியிடம் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சி.வி.கார்த்திகேயன் தலைமையிலான மூன்றாவது நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று அவர் முன்பு செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது