சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் வரும் 25ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது.
சென்னை: புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தில் சர்வதேச விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. வங்கதேச நாட்டின் டாக்காவில் இருந்து வரும் விமானம் முதல் விமானமாக இங்கு வந்து புறப்படுகிறது.
சோதனை முறையில் முதலில் சிறிய ரக விமானங்கள் வந்து செல்லும், மே மாதத்தில் இருந்து பெரிய விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்டார். திறன் அதிகரிக்கப்பட்ட இந்த முனையம் மூலம் ஆண்டுதோறும் 3 கோடி பயணிகளை கையாளும் திறனை விமான நிலையம் பெறும் என கூறப்படுகிறது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…