வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…ஆர்டிஓக்களுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு!

Default Image

சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

“கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊாடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து முடிவுற்ற நிலையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க 31.10.2021 முடிய கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. தற்போது கால அவகாசம் முடிவுற்ற நிலையிலும் சில போக்குவரத்து வாகனங்கள் இன்றைய தேதி வரை முடிவற்ற ஆவணங்களை புதுப்பிக்காமல் வாகனங்கள் பொதுச் சாலையில் இயக்கப்படுவதாக தெரிய வருகிறது.

அவ்வாறு இயக்கப்படும் நிலையில் விபத்துகள் ஏற்பட்டால், காப்பீடு வழங்க இயலாத நிலையில் உள்ளது.இதனால் பொதுமக்களின் பயணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே,அனைத்து சரக அலுவலர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதகளில், தகுதிச் சான்று, காப்புச் சான்று புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை தினசரி மேற்கொண்டு அதன் விபரத்தினை உரிய படிவத்துடன் இவ்வலுவலகத்திற்கு பிரதி திங்கள் காலை 11 மணிக்குள் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ICC CT 2025 INDvNZ - TN CM MK Stalin
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO