ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப் படுகிறது. சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.
இதற்கான பணிகளை கடந்த 22-ம் தேதி தொடங்கியது. ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு அங்கு 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
70 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு வேகன்களில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பட்டு 50 வேகன்கள் மூலம் கொண்டு வர உள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் புறப்பட்டது.சென்னைக்கு மதியம் 1 மணிக்கு ரயில் வந்தடையும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்காக இரண்டு ரயில்கள் ரயில்வே அதிகாரிகள் ஒதுக்கி உள்ளனர்.ஒரு ரயில் இருமுறை ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் அடுத்து செல்லும்.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…