ராயபுரத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 8,500 ஐ தாண்டியது..!

ராயபுரத்தில் இதுவரை மொத்தமாக 8,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 4000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 2,027 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை மொத்தமாக 8,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 8436,பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 6,943 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 7,017 பெருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஆலந்தூர் 872, அடையாறு 1,682, பெருங்குடி 821 சோழிங்கநல்லூர் 493 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Overall zone-wise detailed status of COVID-19 cases in #Chennai.#Covid19Chennai #GCC #chennaicorporation pic.twitter.com/gZ6LGYDRb7
— Greater Chennai Corporation (@chennaicorp) July 3, 2020