கோவை:பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்ய உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆக.27 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம் உருவாக்கப்படும் என்ற அறிப்பினை வெளியிட்டார்.
இந்நிலையில்,பொதுப்பணித்துறை,சென்னை மண்டலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலங்களை மறுசீரமைத்து பணி அடிப்படையிலும் மற்றும் புதிய பணியிடங்களை தோற்றுவித்தும்,கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மண்டலம் உருவாக்குவதற்கு தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,கோவை,நீலகிரி,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி,கோவை மண்டலம் புதிதாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…
சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக…
சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன்…