கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலை மற்றும் பொது மக்களின் நலன் கருதி, ஜனவரி 26 அன்று கிராம சபையை நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.எனவே,இன்று (26.01.2022) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபையையும் கூட்டக்கூடாது என்று தேவையான உத்தரவுகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…