கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது. எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி,தமிழகம் முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
மேலும்,வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில்,கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களான இன்று,மற்றும் சனி,ஞாயிறு (ஜனவரி 7,8,9)ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி இல்லை.எனவே,இந்த நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். எனினும்,திங்கள் முதல் வியாழக்கிழமை வரை வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்த நிலையில்,வரும் 9-1-2022 அன்று அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…