இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்;என்னென்ன கட்டுப்பாடுகள்? – முதல்வர் அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள்,உணவகங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனினும்,இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம்,மருத்துவமனைகள்,மருந்தகங்கள்,பெட்ரோல் பங்குகள்,ஆம்புலன்ஸ்,அமரர் ஊர்தி,ஏ.டி.எம்,சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.அதன்படி,

  • மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்.
  • மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள்(பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் வெப்ப நிலையை செய்தல்,கூட்ட அணிதல்,நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.)
  • உற்பத்தி தொழிற்சாலைகள்,தகவல் செயல்பட தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள்,மருந்தகங்கள்,பால் விநியோகம்,ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
  • பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.
  • 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது,உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
  • 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம்,இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.அவ்வாறு பயணிக்கும் போது,பயணச்சீட்டுவைத்து கொள்ள வேண்டும்.

இதர கட்டுப்பாடுகள்:

  • மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
  • மேலும்,அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
  • ஆனால்,பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏதுவாக, 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொழுதுபோக்கு,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
  • கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
  • அரசு,தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல்,கலை நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும்.
  • பேருந்து,மெட்ரோ,புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
  • வழிபாட்டுதலங்களில் வெள்ளி,சனி,ஞாயிறுகளில் அனுமதி இல்லை.
  • அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
  • மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • கடைகள்,வணிக நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள்,வணிக வளாகங்கள்,திரையரங்குகள்,அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள்,உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது அலுவலக அடையாள அட்டை மற்றும் தங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்