பரபரப்பு…ஆட்சி மாறிய பின் முதல் நாளே கைது இந்த அமைச்சர்தான் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி!
பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கோவை மாவட்டம்,மசக்காளிப்பாளையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு மாறும்போது முதல் நாளே,முதல் ஆளாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: “தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்டம் ஒப்பந்த்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டு பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.இதிலிருந்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தப்பிக்க முடியாது.எனவே, தற்போது ஆட்சியில் உள்ள தமிழக அரசு மாறியபின்னர் முதல்நாள் முதல் ஆளாக செந்தில் பாலாஜி அவர்கள் கைது செய்யப்படுவார்’,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து பேசிய அண்ணாமலை: “அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக இதுவரை தலையிட்டது இல்லை.இனியும் தலையிடப்போவதில்லை.ஏனெனில்,தனிமனிதர்களை எப்போதும் பாஜக முன்னிலைப்படுத்தாது.மாறாக சித்தாந்ததை மட்டுமே நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.குறிப்பாக,கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம்”,என்று தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர மாவட்ட தலைவர் திரு பாலாஜி அவர்களின் தலைமையில், நமது மத்திய இணை அமைச்சர் திரு @vmbjp அவர்களின் முன்னிலையில், நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் நூற்றுக்கணக்கான திட்டங்களில் பயன்பெற்ற சகோதர சகோதரிகளின் அனுபவங்களை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.(1/5) pic.twitter.com/LzJHRkEoQB
— K.Annamalai (@annamalai_k) June 16, 2022