2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்க வேண்டும் எனவும்,துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக,அனைத்து அரசு செயலாளர்களுக்கும் இறையன்பு அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மார்ச் 18 (இன்று) சட்டமன்றம் கூடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.இந்தக் காலகட்டத்தில் உங்கள் இருப்பு அவசியம்.
எனவே, நீங்கள் தலைமையகத்தில் இருக்குமாறும்,சட்டசபை கூட்டத் தொடரின் போது சுற்றுப்பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைத் தலைவர்களுக்கு நீங்கள் இதே போன்ற அறிவுறுத்தல்களை வழங்கலாம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…