#Justnow:சட்டப்பேரவையில் இன்று…முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள துறை மீதான விவாதம்!

Default Image

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெறுகிறது. அதன்படி,இது குறித்து பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப உள்ளனர்.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது உள்ள சட்டம் ஒழுங்கு நிலை,காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் மரணம் தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்து,சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. முதலைமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெறும் விவாதம் என்பதால் இன்று சட்டப்பேரவை நிகழ்வுமிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில்,கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சற்று முன்னர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.மேலும்,கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைத்த இந்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்க முழுமையாக கெட்டு விட்டது எனவும் ஈபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,தமிழக கள்ளச்சாராயக்காரர்கள்,மருந்து சரக்கு குற்றவாளிகள்,குண்டர்கள்,பாலியல் குற்றவாளிகளின் அபாயகரமான நடவடிக்கைகளை தடுத்தல் (திருத்தச்) சட்ட முன்வடிவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்கிறார்.மேலும்,டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தாக்கல் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest