நீட் தேர்வுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது – தயாநிதி மாறன்

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தயாநிதிமாறன், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது என்றும் தங்களை தயார் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது.
இது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள கிராமத்தில் மருத்துவ கனவுகளுடன் யார்யார் இருக்கிறார்களோ அவர்கள் பயிற்சி பெற வேண்டும். கொரோனாவால் அனைத்தும் முடங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை செய்தே தீரவேண்டும் என்று குறிப்பாக தமிழ்நாட்டை பாதிக்கின்ற வகையிலே செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக அடிமை அரசு வெறும் இரங்கல் மட்டும் சொல்கிறார்கள். உயிர்களை இழந்தது போதும், அவர்களுக்கு இரங்கல் சொல்வதை விட நீட்டுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
#நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவ மாணவிகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும்!#BanNEET_SaveTNStudents pic.twitter.com/wApC21mnpg
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) September 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025