சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது! – கிருஷ்ணசாமி

Default Image

தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன என திய தமிழகம் கட்சி நிறுவனர் குற்றசாட்டு.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம், திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின். தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று மதுரையில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி பொது மக்களிடையே துாய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். மக்கள் இயக்கத்திற்கு பள்ளிகள், கல்லுாரிகள், சமூக ஆர்வலர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின், ஊராட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மக்கள் இயக்கத்தின் மூலம் நாட்டின் துாய்மைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தின் பெரு நகரங்களை கொண்டு வருவோம் எனவும் கூறியிருந்தார்.

மேலும், தமிழ் திரைப்படங்களில் அதிக வன்முறை, ஆபாச காட்சிகளை இயக்குனர்கள் திணிக்கின்றனர். இதுபோன்ற திரைப்படங்களை பார்ப்பதால் இளைஞர்கள் கெட்டுப் போகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் அதிகரிக்கும். தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன. இளைஞர்களின் பலவீனங்களை அறிந்து, இயக்குனர்கள் இதுபோன்ற திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் குற்றசாட்டியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்