புலி வருது புலி வருது'"- உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் அறிக்கை
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.எனவே தமிழகத்தில் உள்ள கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன.இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Makkal Needhi Maiam Party’s Press Release Regarding Local Body Election.#MakkalNeedhiMaiam pic.twitter.com/hjaIGfLPQb
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 29, 2019
அந்த அறிக்கையில்,ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை பற்றி எந்த கவலையும் இல்லாமல், இரு கட்சிகளும் தங்கள் சுயநலத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளாக’ “புலி வருது புலி வருது'” என்பது போல் அரசு தேர்தல் நடத்தப்போவதாகவும் அறிவிப்பதும், அதன் பிறகு அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்துக்கு போவதும் என உள்ளாட்சி தேர்தலை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி வருகின்றனர்.
தமிழக மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், இந்த இரண்டு கட்சிகளையும் அடையாளம் கண்டு, புறகணிப்பது தான் உண்மையான மக்களாட்சி உருவாதற்கு வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.