இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!மீனவர்கள் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் ..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,காற்று மண்டல மேலடுக்கு சுழற்சியால் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .அதேபோல் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தென் கிழக்கு வங்கக்கடல், கேரளாவை ஒட்டியுள்ள பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.