இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார்.
இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெ.அன்பழகன் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…