ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வந்த யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
யூடியூப்பில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது பல புகார்கள் வந்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை தேடி வந்த நிலையில், தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். நேற்று இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதால் ஓராண்டுக்கு மதனுக்கு ஜாமீன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…