கோபத்தில் கள்ளக்காதலியின் கையை வெட்டிய கள்ளக்காதலன்!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன தொட்டிபாளையைம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா ஆவார்.இவரது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி பிரபு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு இரு குழந்தைகள் உள்ளன.இதனால் ஆதரவற்ற இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது காரமடையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கராஜ் ,சுஜாதா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.மேலும் அடிக்கடி அவரிடம் இருந்து வீட்டு செலவுக்கு சுஜாதா பணம் வாங்கி வந்துள்ளார்.பின்னர் வேறொரு நபரிடமும் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரிடம் இருந்தும் வீட்டு செலவிற்கு சுஜாதா பணம் வாங்கியுள்ளார்.இதனை அறிந்த தங்கராஜ் சுஜாதாவின் மீது மிகுந்த கோபம் அடைந்துள்ளார்.பின்னர் கடந்த ஜூலை 29-ம் தேதி தங்கராஜ் சுஜாதா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தை வெட்ட எண்ணியுள்ளார்.
ஆனால் சுஜாதா கையை வைத்து தடுக்கவே கை துண்டாகியுள்ளது.பின்னர் தங்கராஜ் கத்தியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .பிறகு அலறி அடித்து கொண்டு சுஜாதா வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் காரணாமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய தங்கராஜை தீவிரமாக தேடிவருகின்றன.