கதவை உடைத்து பார்த்த கள்ளக்காதலன்!அதிர்ச்சி அடைந்த சம்பவம்!
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மெர்லின் ராஜ் ஆவார்.இவர் ஒரு சாப்டவேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் இவருடன் ஒரே கம்பெனியில் பணிபுரிந்த டெல்லியை சேர்ந்த கீதுசிங் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.ஏனெனில் கீது சிங்கும் ஏற்கனவே திருமணமாகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் அந்தோணியும் கீதுவும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர்.
இதன் காரணாமாக கடந்த மூன்று மாதங்களாக போரூர் உதயா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் அந்தோணி மீது சந்தேகம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூலை 30-ம் தேதி இருவரும் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் அந்தோணி வேலைக்கு சென்றுள்ளார்.பிறகு இரவு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது.
உடனே சந்தேகம் அடைந்த அந்தோணி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.அங்கு கீது சிங் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.பின்னர் கீது சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.