சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.!
Summer 2024 : கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வீட்டினுள் இருந்தால் கூட வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இன்னும் ஏப்ரல், மே மாத காலங்கள் இருக்கிறதே என்ற கவலை மக்கள் மத்தியில் தற்போதே எழ ஆரம்பித்து விட்டது.
Read More – இன்று வெளியாகிறது மக்களவை, 4 சட்டமன்றங்கள் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள்..
பனிப்பாறை உருகுவது, உலக தட்பவெப்பநிலை மாற்றம், உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கூறி உலக வெப்பமயமாவதற்கு ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை கூறும்போது, அதில் இருந்து தமிழகம் மட்டும் தப்பிக்கவா போகிறது.?
தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் மார்ச் 19ஆம் தேதி வரையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலேயே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.
Read More – குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்! பெயர் என்ன தெரியுமா?
மேலும், வழக்கமாக இந்த தேதியில் இருக்கும் வெப்பநிலை அளவை விட இந்த முறை அதிக வெப்பநிலை இருப்பதாகவும், வெப்பநிலை அளவில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவீட்டிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.