மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியை பணியிடமாற்றம் ..!
மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியையை பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு.
திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அந்த பள்ளியில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது மகனிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவியை மருமகள் என உறவுமுறை கூறி அழைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, தனது மகனிடம் பேசவில்லை என்றால், மதிப்பெண்ணில் கைவைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையயடுத்து, இது தொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், மாவட்ட கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். மாணவியின் புகாரின் பேரில், பள்ளிக்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆசிரியை சாந்தியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.