தமிழகம் முழுவதும் தொடங்கியது ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி வாரியம் நடத்தும் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் இன்றும் மற்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1552 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்.
ஜூன் 8 ஆம் தேதியான இன்று முதல் தாளுக்கான தேர்வும், ஜூன் 9 தேதியான நாளை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இன்று முதல் தாளுக்கான தேர்வு தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.