#Breaking:கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழா – முதல்வர் அறிவிப்பு!
தமிழக சட்டப் பேரவையில் மின்சாரத்துறை,தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கூறுகையில்:”5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்,மகளிருக்கும் சொத்துரிமை,உழவர்களுக்கு மின்சாரம்,அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.
மேலும்,கலைஞர் அவர்கள் கைம்பெண் மறுமணம் நிதி உதவி,மகளிர் சுய உதவிக் குழுக்கள்,பெரியார் சமத்துவப்புரம் ஆகிய திட்டங்களை தந்தவர். எனவே,கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி “அரசு விழாவாக” கொண்டாடப்படும்”, என்று கூறியுள்ளார்.