ஒடிசாவிலிருந்து திரும்பியது தமிழக குழு…. தமிழகப்பயணிகள் குறித்து விளக்கும் உதயநிதி.!

Udhaynidhi OdisaReturn

ஒடிசாவிலிருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, உதயநிதி தலைமையிலான தமிழக குழு சென்னை திரும்பியது.

ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவர்கள் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவர நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் சிலர் அங்கு சிக்கியுள்ளனரா, என்று ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது. அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குழுவுடன் ஒடிசாவின் பாலசோருக்கு, விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர்.

மேலும் மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் சென்று அமைச்சர் உதயநிதி நலம் விசாரித்தார். ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு இறந்த உடல்கள் மீட்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலும் சென்று உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு பிறகு, உதயநிதி தலைமையிலான தமிழக குழு இன்று சென்னை திரும்பியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி, ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை, ஒடிசா பாலசோர் மருத்துவமனையிலும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை, மற்றும் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் ஆய்வு செய்தோம் அங்கும் தமிழர்கள் யாரும் கண்டறியப்படவில்லை. மேலும் பயண முன்பதிவு செய்தவர்களில் ஆறு பேர் நிலை குறித்து தகவல் அறிய முயற்சி செய்து வருகிறோம்.

இதற்காக தமிழக அதிகாரிகள் குழு இன்னும் ஒடிசாவில் இருக்கிறது, விரைவில் அந்த 6 பேர் குறித்த தகவலும் நமக்கு கிடைக்கும் என்று உதயநிதி கூறியுள்ளார். ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கு நன்றி, மற்றும் பாராட்டுக்கள் என்று உதயநிதி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains